மர்மமான ராட்சத உயிரினம் - வீடியோ
ஒரு மர்மமான கடல் உயிரினம் கடற்கரைப்பகுதியில் உள்ளூர் வாசியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியா மலூக்கு மாகாணத்தில் சீராம் தீவுப்பகுதியின் கரையில் அழுகிய நிலையில், உள்ளூர்வாசி அஸ்ருல் என்பவரால் இந்த உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது.
15 மீட்டர் நீலம், 35 டொன் எடை கொண்ட இந்த உயிரினம் உடல் சிதைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
முன்னதாக அஸ்ருல் இதை சிதலமடைந்த படகு என்று தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்.
இந்த அரிய வகை உயிரினத்தின் வீங்கிய உடலைப் பார்க்க செராம் தீவின் ஹுலுங் கடற்கரைக்கு பெரும் கூட்டம் கூடியுள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்ததும் கடற்கரைக்கு சென்ற ஆராய்ச்சியாளர்கள், சடலத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.