News Update :

Tuesday, May 2, 2017

TamilLetter

தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்தது


 தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்தது

கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது மாஸ் விமானம் ஒன்றின் டயர்கள் வெடித்தன. விமானி சாதர்யமாக செயல்பட்டதால் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு உயிர் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை. 
இன்று காலை 7.13 மணிக்கு கேஎல்ஐஏ விமான நிலையத்தில் ஜகர்த்தாவிலிருந்து கோலாலம்பூர் வந்த எம்எச்726 விமானம் தரையிறங்கியபோது விமானத்தின் இரு டயர்கள் ஓடுபாதையையில் இறங்கிய பிறகு வெடித்தன. இருப்பினும் பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். பயணிகள் யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் கூறினர்.
காலையில் நடந்த இச்சம்பவத்தினால் கேஎல்ஐஏவின் இரண்டாவது ஓடுபாதை மூடப்பட்டுள்ளது. விசாரணைகள் முடியும் வரை அந்த ஓடுபாதை மூடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் கூறினர்.
பாதிப்படைந்த விமானத்தின் மற்ற பயணங்கள் ஏர்பஸ் 330 விமானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த மாஸ் விமானம் பாதுகாப்பிற்கு தாங்கள் எப்பவும் முன்னுரிமை வழங்குவோம் என கூறியது. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-