News Update :

Wednesday, May 17, 2017

TamilLetter

முஸ்லிம்களைத் தனிக்க வைக்கும் பௌத்த இனவாதிகளுக்கு அதாவுல்லா விலை போய் இருக்கிறார். ஜப்பானிலிருந்து தவம்



முஸ்லிம்களைத் தனிக்க வைக்கும் பௌத்த இனவாதிகளுக்கு அதாவுல்லா விலை போய் இருக்கிறார். ஜப்பானிலிருந்து தவம்
சமூகம் நிர்க்கதிக்குள் மாட்டித் தத்தளிக்கும் போது அதாவுல்லா தனது அசிங்கமான அரசியலை அரங்கேற்ற நினைத்து, வடக்கு - கிழக்கு இணைப்பை இன்றைய பௌத்த இனவாத செயற்பாடுகளோடு இணைத்துப் பேசுவது மூளைக்கும் வாய்க்கும் தொடர்பற்ற விடயமாகும்.
தனது அரசியலை நாட்டில் மீண்டும் நிலைநிறுத்த, குழப்பங்களை விளைவிக்கும் நிகழ்ச்சி நிரலை கையில் எடுத்திருக்கும் மஹிந்தவைக் காப்பாற்ற அதாவுல்லா முனைகிறார் என்பதை மக்கள் விளங்கிக் கொள்வர்.
குறிப்பாக தோப்பூர் பகுதியில் பௌத்த இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அசாரண நிலையால் மக்கள் அல்லோலகல்லோலப்படும் போது, அதாவுல்லா தனது அரசியல் இலாபம் கருதி அறிக்கை வெளியிடுவது அவரை யாரென்று மீண்டும் நிருபிக்கிறது.
பேருவளை - அழுத்கம அழிக்கப்பட்ட போது, பாராளுமன்றத்தில் "இது ஒரு சர்வதேச சதி" என்று கூறி அன்று மஹிந்தவைக் காப்பாற்றினார். இன்று மீண்டும் அதே வழியைப் பின்பற்றி இனவாத நிகழ்ச்சி நிரலைக் காப்பாற்ற முனைகிறார். அதாவுல்லா இச்சந்தர்ப்பவாத அரசியலைக் கை விட வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் கிழக்கு மாகாண சபையிலும் இவ்வாறான இனவாத நிகழ்ச்சி நிரலை எதிர்த்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்ற நாட்டின் தலைவர்களின் கவனத்தை எம் பக்கம் திருப்பி இருக்கிறது. அவர்கள் நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்ற போது, "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க" அதாவுல்லா முனைகிறார்.
ஞானசாரவைப் பற்றியோ அல்லது ஏனைய பௌத்த இனவாதிகளைப் பற்றியோ அதிகாரத்தில் இருந்த போது வாய் மூடி மௌனித்திருந்த அதாவுல்லா, இன்று பிரச்சினையை திசை திருப்ப முனைவதை அங்கீகரிக்க முடியாது.
இன்று முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையிலான கூட்டத்தில்
தோப்பூர் பிரதேசத்தில் பௌத்த இனவாதிகளால் தொந்தரவு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அதே இடத்தில் வாழ முடியும் எனவும், பயிர்ச்செய்கை பற்றி நடவடிக்கை எடுக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு சமூகத்திற்கு உதவ முடியாமல் விட்டாலும், பிரச்சனைகளை திசை திருப்ப முனைய வேண்டாமென அதாவுல்லாவை சமூகம் சார்பில் கோருகிறோம்.
பௌத்த இனவாத அடக்குமுறைக்கு எதிராக சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய காலகட்டத்தில், தமிழர்களுக்கு எதிராகப் பேசி, அவர்களிடமிருந்து முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் தார்மீக ஆதரவைத் தடுக்கின்ற கைங்கரியத்தைச் செய்து, முஸ்லிம்களை தனிக்க வைக்கும் பௌத்த இனவாதிகளின் தந்திரபாயத்திற்கு அதாவுல்லா விலை போய் இருக்கிறார். இதனை அவர் கைவிட வேண்டும்
(ஜப்பானிலிருந்து)

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-