ஹஸனலி தரப்பினரை தோல்வியடையச் செய்யும்? அட்டாளைச்சேனை
குல்ஸான்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கிமை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென ஆக்ரோசத்துடன் களமிறங்கிய அதன் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி இன்று சோர்ந்து போய் காணப்படுவதாக அறிய முடிகிறது.
அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளில் தனது பிரச்சாரங்களை மேற் கொண்ட போதும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தமது பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியாமல் போனது தனது இயலாமையை காட்டுகின்றதாக மக்களால் உணர முடிகின்றது.
அட்டாளைச்சேனையை சேர்ந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஹஸனலியின் சொந்த ஊரில் வைத்தே முடிந்தால் அட்டாளைச்சேனையில் ஒரு கூட்டத்தையாவது நடத்திக் காட்டுங்கள் என சவால் விட்டிருந்தார்.இந்த சவாலை ஹஸனலி தரப்பினர் ஏற்றுக் கொண்ட போதிலும் பல மாதங்கள் கடந்த நிலையில் அதை நிறைவேற்றவில்லை என்பது அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் பல வருடங்களாக செயலாளராக இருந்த ஹஸனலி கட்சியின் எந்தவித முன்னேற்றகரமான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை.குறைந்தது தனது சொந்த மாவட்டமான அம்பாரையிலாவது கட்சியை புனரமைப்பு செய்து ஒழுங்குபடுத்த முடியாதவர் எப்படி ஒரு புதிய கட்சியை ஒழுங்குபடுத்த முடியுமென மக்களால் கேள்வியெழுப்பப்டுகின்றன.
கலைஞர் கருணாதிநி தலைமைதாங்கும் தி.மு.கா நிலமை போன்று ஹஸனலியும் ஒரு புதிய செயல் தலைவரை நியமிக்க வேண்டிய நிலையே தோன்றியுள்ளது.
எது எப்படியோ கிழக்கு சுகாதார அமைச்சர் விடுத்த சாவலை எதிர்கொள்வதற்கு இக் கூட்டணியால் இதுவரைக்கும் முடியாமல் போனது இக் கூட்டணியின் தோல்வியாக பார்க்க முடியுமா அல்லது ஹஸனலி பதுங்குவது பாய்வதற்காகவா? எனும் கேள்விக்கு இன்னும் ஒரு மாதம் காத்திருப்போம்