News Update :

Friday, May 12, 2017

TamilLetter

பிள்ளையானை நீதிவான் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்த தேவையில்லை.

பிள்ளையானை நீதிவான் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்த தேவையில்லை.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட நால்வரும் இனிமேல் நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்து வர தேவையில்லையென மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதனால் மேல் நீதிமன்ற வழக்கின் போதே இவர்களை அழைத்து வரும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பிள்ளையான் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-