News Update :

Sunday, May 7, 2017

TamilLetter

மூன்று இணைபிரியா நண்பர்கள், அடுத்த ஒருமணி நேரத்தில் விபத்தில் உயிரிழந்தனர்.


பல்கலைக்கழக ஆங்கிலத் தேர்வுச் சான்றிதழை (மூயெட்) பெற்றுக்கொண்டு வருவதற்காக ஆசையோடு வீட்டை விட்டு ஒன்றாகக் கிளம்பிய மூன்று இணைபிரியா நண்பர்கள், அடுத்த ஒருமணி நேரத்தில் விபத்தில் உயிரிழந்தனர். 
இந்த மூன்று நண்பர்களின் மரணம், இவர்களின் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. முகமட் அய்மான், நிக் முகமட் சஜிரின் மற்றும் முகமட் ஷவால் என்ற அந்த மூன்று நண்பர்களும் பயணம் செய்த கார், அலோர்காஜா -மலாக்கா தெங்கா- ஜாசின் நெடுஞ்சாலையில் தாமான் செங் பிஸ்தாரிக்கு அருகில் விபத்துக்குள்ளானது.
முதல் நாள் பெய்த மழையில், நெடுஞ்சாலையில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் கார் இறங்கிய பின்னர் கட்டுப்பாட்டை  இழந்து, எதிர்ப்புறச் சாலையில் புகுந்து, அங்கு ஒரு காரின் மீது மோதிய பின்னர் தலைகீழாகக் கவிழ்ந்தது. 
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படைப் பிரிவினர் காரினுள் இருந்து அவர்களை மீட்டனர். சம்பவம் நடந்த இடத்திலேயே அவர்கல் இறந்து விட்டனர் என்று குபு தீயணைப்புத் துறை நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் கே. கலைச்செல்வன் தெரிவித்தார். 
ஆங்கில தேர்வுச் சான்றிதழைப் பெறுவதற்கு மூவரும் ஆவலுடன் புறப்பட்டுச் சென்றதாகவும் 19 வயதுடைய இவர்கள் அனைவரும் மேற்படிப்பைத் தொடரும் ஆர்வத்தில் இருந்தாகவும் குடும்பத்தினர் கூறினர். 
ஒருமணி நேரத்திற்கு முன்பு உற்சாகமாக அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பினர். ஆனால், ஒருமணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் நிரந்தரமாகவே எங்களை விட்டுப் போய்விட்டனர் என்று காரை ஓட்டிய முகமட் அய்மானின் தாயாரான 44 வயதுடைய மரிசோன் வகாப் வேதனையுடன் கூறினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-