News Update :

Tuesday, May 2, 2017

TamilLetter

ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்துக்கு பொலிஸ் துப்பாக்கிச்சூடு



 ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்துக்கு பொலிஸ்  துப்பாக்கிச்சூடு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், கட்சியின் சின்னமான யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  
கங்கொட நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 40 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   v 
துப்பாக்கியுடன் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அவர் நேற்று (01) மாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.  வேண்டுமென்றே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா அல்லது தவறுதலாக துப்பாக்கியைப் பயன்படுத்தியதால் இந்த சம்பவம் இடம்பெற்றதா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.   
குறித்த கான்ஸ்டபிளை உளநல வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-