சவுதியில் வெளிநாட்டவருக்கு இனி வேலை இல்லை-சவுதி அரசு முடிவு
சவுதி அரேபியாவில் கட்டுமானப்பணிகள் , வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பணிபுரிவதற்கு அதிகமான வெளிநாட்டினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, வெளிநாட்டினர்களின் வேலைவாய்ப்பு விகிதத்தை குறைக்கம் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
சவுதியின் பொதுத்துறையில் 70 ஆயிரம் வெளிநாட்டினர்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது.
அடுத்து வரவிருக்கும் 3 ஆண்டுகளில் இவர்களுக்கு பதிலாக, உள்நாட்டினர்களை பணியில் அமர்த்த சவுதி அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக வணிக வளாகங்களில் தன் நாட்டை சேர்ந்தவர்களையே பணியில் அமர்த்தவுள்ளது.
வேலையில்லாமல் திண்டாடும் சவுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக இந்த முடிவினை சவுதி அரசு எடுத்துள்ளது.
இதன்படி, சவுதியில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை படிப்படியாக நிறுத்துமாறு தனது அமைச்சகங்கள் மற்றும் பிற அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.