News Update :

Monday, May 22, 2017

TamilLetter

விசப்பல்லை மக்கள் பிடிங்கி விட்டனர்- அதாஉல்லா காற்றுக் குடித்தாலும் எழும்ப முடியாது



விசப்பல்லை மக்கள் பிடிங்கி விட்டனர்-  அதாஉல்லா காற்றுக் குடித்தாலும்  எழும்ப முடியாது
முஸ்னத் அலி - சாய்ந்தமருது

அழுகிப் போனதுகளை ஒரு பானையில் போட்டு கொதிக்க வைத்தால் கள்ளச்சாராயமாக மாறுவது போன்று அழுகிப் போன மற்றும் காலவதியான அரசியல் வாதிகளை ஒரு பிளண்டரில் போட்டு கலக்கியபோல் உள்ளது அதாஉல்லா தரப்பின்  கிழக்கின் அவையம்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பதவியிலிருக்கும் போது வராத ரோசம் சும்மா வீட்டிலிருக்கும் போது பொத்துக்கு  வருவது அதிசயமாகவுள்ளது.

நான் மஹிந்தவின் தம்பி என்றார் அதாஉல்லா  ,ஜனாதிபதி எனது நண்பன் என்றார் பஷீர்,அதாஉல்லாவும்,பஷீரும் நமது முஸ்லிம் சமூகத்தின் பரம எதிரி என்றார் ஹஸனலி,இப்படியானவர்கள் ஒரு பாத்திரத்தில் 

தனது சொந்த ஊரில் பஷிராலும்,ஹஸனலியாலும் சாதாரண  பிரதேச சபை உறுப்பினராகவே   வர முடியாதவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சராம் பல் விழுந்த கிழவி துள்ளிக் குதித்தது போல் அவ்வளவு ஆரவாரம்.

அதாஉல்லாவிற்கு தெரியும் 10ஆயிரம் வாக்குகளைத் தாண்ட  முடியாது என்று அதற்காக  வேறு பாணியில் முயற்சிக்கிறார்.அதாஉல்லாவுக்கு இம் முறை வாக்களிப்போமா என்று பொது மக்களிடம் ஒரு கதைக்கு   கேட்டால் பகடி பன்ன வேண்டாம் என்று சண்டைக்கு வருகிறானுகள் நமது மக்கள்.

அமைச்சர் ரிஷாட்டை நம்புகின்றனர் அமைச்சர் ரிஷாட் ரணிலைத் தாண்டி ஒரு அடியேனும் வைக்க முடியாது என்பதை அரசியல் ஞானிக்கு புரியாது என்பது புரிந்தாலும் அன்ஸிலுக்கும்  புரியாமல்   போய் விட்டதா?

ஹஸனலி வெறும்  பேசும் கிளி சொல்லிக் கொடுப்பதை அப்படியே திருப்பி சொல்லி விடும் முன்பு ஹக்கீம் சொன்னதை தனப்பாடமாக்கி சொன்னார் இன்று அன்ஸில் சொல்வதை திரும்ப சொல்கிறார்.

இவர்களின் கூட்டு தேர்தல் வரும் வரைக்கும்தான் தேர்தல் வந்தால் எஸ்.பி.மஜீத் இருந்த இடம் சொல்லாமலே போய்விடுவார்.மீண்டும் முஸ்லிம் காங்கிரசில் இணைவதற்கு ஹக்கீமுக்கு முன்னாள் தவிசாளர் வாஸீத் ஊடாக துாது அனுப்பிய செய்தியும் இவர்களுக்கு தெரியாது.

உப வேந்தர் இஸ்மாயில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இப்ப கூப்பிட்டாலும் நான் ஒடி வருவேன் அவர்தான் என்னை சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று சொல்கிறார்.ஹக்கீமின் பச்சை  சிக்னல் விழுந்தால்  இந்த கூட்டமைப்பின் நிலை அரோகர

ஜெமீலால் மாத்திரம் என்ன செய்ய முடியும்  சாய்ந்தமருது  முஸ்லிம் காங்கிரஸ் காரன் விடமாட்டான் ரிஷாட்டின் கதை கேட்டு இருந்ததை இழந்ததுதான் மிச்சம் வீட்டுக் காரியின் குமுறல்









TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-