News Update :

Tuesday, May 30, 2017

TamilLetter

அட்டாளைச்சேனை இளைஞர் சேவை உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை?

அட்டாளைச்சேனை இளைஞர் சேவை உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை?

சாதீக்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதேச விளையாட்டு வீரா்கள் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம்  கோரிக்கை விடுக்கின்றனர்.

கிழமையில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் ஒப்பமிட்டால் போதும் என நினைத்து கடமையாற்றும் இந்த உத்தியோகத்தரினால் பல  இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இளைஞர்களின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் வருடாந்தம் கிராம மட்டத்தில்  நடாத்தப்படும் இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தாமல் தட்டிக் கழித்து வருகின்றார்.

இம் முறை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவை பிரிவுகளுக்கிடையில் நடாத்தப்பட வேண்டிய கிரிக்கட் போட்டியை நடாத்தாமல் தான் விரும்பிய வீரா்களை மாவட்ட போட்டியில் விளையாட அனுப்பி வைத்தார்.
இவரால் தெரிவு செய்து அனுப்பிய வீரா்கள்  மாவட்ட போட்டியில் விளையாடி   தோல்வியடைந்தனர்.

கிராம மட்டத்தில் போட்டிகளை நடாத்துவதன் மூலமே சிறந்த வீரா்களை தெரிவு செய்ய முடியும் என்பதனால்தான் கழகங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளை அவர்வள  வசிக்கும் கிராம சேவை பிரிவுகளில் இளைஞர்களை பங்கு பற்ற வைத்து அவர்களின் திறமைகளை இனம்கண்டு ஊக்கப்படுத்துவதே நோக்கமாக இருந்த போதும் அதற்கெதிராக இந்த உத்தியோகத்தர் செயற்பட்டதனால் பல திறமையான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மற்றும் முனனைய ஆண்டுகளில் அடையாளப்படுத்தப்பட்ட இளைஞர்கள்  மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களால் சிபாரிசு செய்யப்படும் இளைஞர்கள் ஆகியோரை மாவட்ட போடடிக்கு   அனுப்பியதால் திறமையான வீரா்கள் மாவட்ட மட்ட போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

அத்தோடு கிரிக்கெட் போட்டிகளில் தேசிய மட்டத்தில்  பல சாதனைகளைப் படைத்த அட்டாளைச்சேனை பிரதேசம் இன்று இவரின் இந்த செயற்பாட்டால் தோல்வி கண்டுள்ளது என்பத உண்மையே.

குறிப்பிட்ட இந்த உத்தியோகத்தர் இதற்கு முன்னர் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் எந்தவித பங்களிப்பையும் செய்யாமல் வருடங்களை கழித்ததும் குறிப்பிடத்தக்கது.

எனவே இவ் உத்தியோகத்தருக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுக்கிறோம்.அத்தோடு இதற்கான தீர்வை பிரதேச செயலாளரால் வழங்காத சந்தா்ப்பத்தில் மாவட்ட செயலாளர்,அமைச்சின் செயலாளருக்கு முறைப்பாடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.






TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-