News Update :

Saturday, May 6, 2017

TamilLetter

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஹஸனலி முதலமைச்சர் வேட்பாளர்?


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஹஸனலி முதலமைச்சர் வேட்பாளர்? கசிந்தது

குல்ஸான் எபி
இன்னும் சில மாதங்களில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால்.அரசியல் கட்சியில் தனது ஆயத்த வேளைகளை செய்து வருகின்றது.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரைக்கும் எந்தொரு கட்சியாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத சுழ்நிலையே காணப்படுகின்றது.

கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டிய இக்கட்டான நிலைக்கு பிராந்தியக் கட்சிகள் உட்பட தேசியக் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு நின்கின்றது.

சிங்கள் பிரதேசங்களில் மஹிந்த ராஜபக்ஸவின் செல்வாக்கு அதிகரித்து வருகிற   ஒரு மாயை தோன்றமளிப்பதால் அதை இல்லாமல் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு மைத்திரியும்,ரணிலும் தள்ளப்பட்டுள்ளனர்.

இதை நன்கு உணர்ந்த அரசாங்கம் முதலில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்தி மஹிந்தவால் இனி ஒரு போதும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பதை சிங்கள மக்களுக்கு நிருபித்தே ஆக வேண்டும்

இப்படியான நிலையில் தேசியக் கட்சிகளின்   பலப் பரிட்சை ஒரு புரம் இருக்கத்தக்க  பிராந்தியக் கட்சிகளும் தனது காய் நகர்த்தல்களை செய்து வருகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரைக்கும் அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் இணைந்து போட்டியிடும்  வாய்ப்பே அதிகமாக காணப்படும். அத்தோடு ,மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச் சின்னத்தில் தனித்தே   போட்டியிடுவதையே விரும்பும்,

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அண்மைக் காலமாக காணிப் பிரச்சினைகள் தொடக்கம் இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் இரண்டு பிரதான கட்சிகளின் ஊடாகவே போட்டியிட   வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்  அத்தோடு எதிர் காலத்தில் தொகுதி வாரியான தோ்தல் முறை ஏற்படும்  நிலை தோன்றினால்    பிரதான கட்சிகளின்   ஆசீர்வாதம் இல்லாமல் வெற்றி பெறுவது இலகுவான காரியமல்ல

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா எப்போதும் அதிகாரத்தில் இருக்கும் ஆளும்  தரப்பினரோடு சேர்ந்து தான் தனது அரசியலை மேற் கொண்டு வருவது அவரின் வழமை.மேலும் தனது கட்சி ஜனாதிபதி மைத்திரியை எதிர்த்து வேறு ஒரு கட்சியில் தேர்தல் கூட்டு வைக்கும் போது அம்பாரை மாவட்டத்தில் சில இடங்களில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவி உட்பட பாதுகாப்பு என ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் கூட்டமைப்பு மூலம் தமிழர்களின் வாக்குகளை பெற முடியாத காரணத்தில் அமீரலி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படவே விரும்புவார்.இதனால்   பஷீர் சேகு தாவுத் தனித்து களமிறங்குவதால் எந்தவித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை.

அதே போல் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டிருப்பதாலும் அரசாங்கத்தை நம்பியே  தனது அரசியல் எதிர் காலம் உள்ளதாலும் முஸ்லிம் கூட்டமைப்பை தவிர்த்து விடுவார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற ஹஸனலி தரப்பினர் ஹஸனலியை முதலமைச்சர் வேட்பாளராக   முன்னிறுத்தி முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது எதிரியான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீமை வீழ்த்துவதற்கு 17 ஆண்டு காலம் ஏற்படாத    சந்தர்ப்பம் இன்று ஹஸனலி தரப்பினரால் ஏற்பட்ட போதும் அதை செய்து முடிப்பதற்கு தன் தலையை அடமானம் வைத்து வாழ்வா, சாவா,   எனும்  போராட்டத்தில் ஈடுபட   அதாஉல்லாவோ,ஹிஸ்புல்லாவோ,அமிரலியோ,நஜீப் ஏ.மஜீத்தோ,  ரிஷாட்டோ முன்வரப் போவதில்லை.

இது இப்படியே இருக்க கிழக்கு மாகாணத்தில் தனி பெரும் கட்சியாக இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவரையும் தாண்டி எந்த முடிவையும் எடுக்காது. என்பதையும் ஞாபகமூட்ட வேண்டியுள்ளது.

இன்னும் ஒரு சிறிய காலப்   பகுதிக்குள் தேர்தல் வரப் போவதால்   ஹஸனலி தரப்பினர் இந்த இடியப்ப சிக்கலை எப்படி தீர்க்க போகின்றனர் என்பதை  காலம்  பதில் சொல்லும்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-