News Update :

Friday, May 5, 2017

TamilLetter

கிழக்கு முதல்வர் நஸீர் அகமட் இனி தேர்தல் கேட்க முடியாது? - அன்ஸில்



கிழக்கு முதல்வர் நஸீர் அகமட்  இனி தேர்தல் கேட்க முடியாது? - அன்ஸில்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட்  எதிர்வரும் காலங்களில் நடைபெரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான அன்ஸில் தெரிவித்தார்.

பாலமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் லெட்டர் செய்திச் சேவையின் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்..

அன்ஸில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாறுஸலாத்தின் உரிமையை பிழையான முறையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட்   தன் பெயருக்கு மாற்றியதை நாங்கள் மக்கள் முன் நிரூபித்தோம்.நாங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்களை கட்சி போராளிகள் நம்புவதற்கு தயாராகயிருக்கவில்லை என்பது வேதனையளிக்கின்றது.

ஆனால் இறைவனின் நாட்டத்தால் கட்சியைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் நியாயம் கேட்டு குற்றவியல்   நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதற்கு தேவையான ஆதராங்களை முன் வைக்குமாறு மோசடி தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ் வழக்கிற்கு ஆதரவாக செயற்பட்ட சட்டத்தரணிகள் கருத்து தெரிவிக்கையில் உரிய பெருமதியை குறைத்து குறைந்த தொகையில் காணி   கொள்வனவு செய்ததாக எழுதப்பட்டுள்ளது மற்றும்  .சாட்சியங்களை மாற்றியது,உரியவரின் பெயரை அழித்து புதியவர்களை சேர்த்தது என பல்வேறு கற்றச்சாட்டுக்கள் முதலமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ளது

இந்த குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் குற்றம் சுமத்தப்பட்டவர் தேர்தலில் நிற்பதற்கு முடியாமல் போகும் என்றார் அன்ஸில்


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-