News Update :

Friday, May 5, 2017

TamilLetter

ஒபாமாவின் காதலை நிராகரித்த வெள்ளைக்கார பெண்!


தம்முடைய மனைவி மிச்செலைச் சந்திப்பதற்கு முன்பு ஒரு வெள்ளைக்கார பெண்ணை உருகி உருகிக் காதலித்து தோல்வி கண்டார் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
அண்மையில் வெளிவந்த அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று, ஒபாமா பற்றிய பல புதிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
'தி மேக்கிங் ஆப் ஒபாமா" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள கந்தப் புத்தகம் அடுத்த வாரம் வெளிவருகிறது. இந்நிலையில், இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள டேவிட் கராவ் என்ற நூலாசிரியர் ஒபாமா பற்றிய சுவராஸ்யமான பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமாவை சந்திப்பதற்கு முன் ஷெய்லா மியொஷி ஜாகெர் என்ற வெள்ளைக்காரப் பெண்ணை, ஒபாமா காதலித்தார்.
தன்னுடைய காதலை ஜாகெரிடம் இரண்டு முறை தெரிவித்து, "என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று மன்றாடினார். ஆனால், கடைசிவரை அந்தப் பெண் ஒபாமாவின் காதலை ஏற்கவில்லை. ஜாகெரின் பெற்றோர்கள் ஒபாமாவை ஏற்க மறுத்தனர்.
ஏனெனில், அப்போதுதான் தமது அரசியல் பயணத்தை ஒபாமா தொடங்கி இருந்தார். வெறும் அரசியல் பேசிக்கொண்டு திரிகிற ஓர் இளைஞன் என்பதால் ஜாகெரின் பெற்றோர்கள் விரும்பவில்லை.
அது மட்டுமின்றி அவர், ஜாகெரை விட வயதில் சிறியவராக இருந்த காரணத்தாலும் இவர்களது காதலுக்கு பெற்றோரின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது. தற்போது, ஓஹியோவில் உள்ள பல்கலைக்கழகத்தின் பேராசிரியையாக ஜாகெர் பணியாற்றி வருகிறார். 
"நான் வெள்ளைக்காரப் பெண்ணை மணந்திருந்தால் அமெரிக்க அதிபராக வந்திருக்க மாட்டேன்" என ஒபாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தப் புத்தகத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர் டொனால்ட் டிரம்பை தமது முன்மாதிரியாக ஒபாமா கருதினார் என்ற தகவலும் இடம்பெற்றுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-