News Update :

Sunday, May 28, 2017

TamilLetter

மின்கட்டமைப்புகள் தகர்வு! இருளில் மூழ்கிய இலங்கையின் ஒரு பகுதி

மின்கட்டமைப்புகள் தகர்வு! இருளில் மூழ்கிய இலங்கையின் ஒரு பகுதி

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டு வரும் இயற்கையின் சீற்றம் காரணமாக பாரிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக பல இடங்களில் மின்சார கட்டமைப்புகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் இரண்டு இலட்சம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதனை சரி செய்வதற்கான வாய்ப்பு அன்றுப் போயுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடைமழை காரணமாக மின்சாரம் வழங்கும் கட்டமைப்பிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் அபிவிருத்தி இயக்குனர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த மின்சார கட்டமைப்பை சரி செய்யும் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிய வெள்ள நிலைமையே இந்த தடை ஏற்பட காரணமாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனர்த்த நிலைமை காரணமாக உள்நாட்டு மின் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள சிறிய பாதிப்புகளை இலவசமாக சரி செய்து கொடுப்பதாக அந்த அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
மின்சார தடை தொடர்பில் அறிவிப்பதற்காக 3 தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1987 என்ற இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கும், 1910 என்ற இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார தனியார் நிறுவனத்துடனும் தொடர்பு கொண்டு மின்சார தடை தொடர்பில் அறிவிக்க முடியும்.
அப்படி இல்லை என்றால் 1901 என்ற தொலைபேசி இலக்கத்தில் மின்சக்தி அமைச்சிற்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-