News Update :

Thursday, May 4, 2017

TamilLetter

அமைச்சர் ரவுப் ஹக்கிமால் கடற்படை முகாம் அகற்றப்பட்டுள்ளது

அமைச்சர் ரவுப் ஹக்கிமால் கடற்படை முகாம் அகற்றப்பட்டுள்ளது

தவிசாளர் - முஸ்லிம் காங்கிரஸ்
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நீண்டகால போராட்டங்களின் விளைவாக முசலி பிரதேசத்தில் அமைந்துள்ள சிலாவத்துறை கடற்படையினர்களின் முகாம் அகற்றும் பணி படையினர்களால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது நீண்ட காலமாக பாராளுமன்றத்திலும், கடந்தகால ஜனாதிபதிகள், பிரதமர்கள் ஆகியோர்களுடன் முஸ்லிம் காங்கிரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
இந்த முகாமிலிருந்து படையினர்களை வெளியேற்றி அந்த நிலங்களை பொது மக்களிடம் கையளிக்குமாறு 2009 தொடக்கம் இன்று வரையில் சுமார் இருபத்தி ஐந்து தடவைகள் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றியது, பாராளுமன்ற ஹன்சாட்டில் பதிவாகியிருக்கின்றது.
அதுபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விவகாரம் தொடர்பாக அதிக தடவைகள் பாராளுமன்றத்தில் உரையாற்றியதுடன், மக்கள் போராட்டங்களையும் நடாத்தி இருந்தார்கள்.
ஆனால் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்கி நீதியினை நிலைநாட்டாமல் சாட்டுப்போக்கு கூறி அரசாங்கம் காலத்தை கடத்தி வந்தது.
இருந்தாலும் அண்மைக்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இணைந்து அரசாங்கத்துக்கு வழங்கிய தொடர் அழுத்தங்கள் காரணமாக கடந்த 30.04.2017 இல் முள்ளிக்குளத்தின் ஒரு பகுதியிலிருந்து கடற் படையினர்கள் வெளியேறி அந்த நிலங்களை பொதுமக்களிடம் கையளித்திருந்தனர்.
அமைச்சர் ரவுப் ஹக்கீம் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோது, மிக விரைவில் சிலாவத்துறை கடற்படை முகாம் பொது மக்களிடம் கையளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தினை ஜனாதிபதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-