திருமணத்தில் சோகம்: மாரடைப்பில் உயிரை விட்ட மணமகன் வீடியோ
திருமண கொண்டாட்டத்தின் போது மணமகன் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாகர் சோலங்கி. இவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது.
இதனால் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் கோலகலமாக செய்யப்பட்டு கொண்டிருந்தன. அப்போது திருமண கொண்டாட்டங்களில் ஒன்றான நடன நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது மணமகன் சோலாங்கி ஒருவரின் தோளில் அமர்ந்து கொண்டு, கையை மேலே உயர்த்தியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதன் காரணமாக அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சோலாங்கி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ள