அட்டாளைச்சேனை கடற்கரையில் திருட்டுத்தனமாக மண் கொள்ளையிடப்படுவதாக தகவல்
பாடங்கள்- றியாஸ்
அட்டாளைச்சேனை கடற்கரைப் பிரதேசத்தில் இரவு நேரங்களில் இரகசியமான முறையில் ஒரு சிலர் கடற்கரை மண் ஏற்றி விற்பனை செய்வதாக அறிய முடிகிறது.
அட்டாளைச்சேனையில் கடல் மண் ஏற்றுவது நீண்ட காலமாக தடையிருந்த போதும் ஒரு சிலர் இரகசியமான முறையில் மண் கொள்ளையில் ஈடுபடுவதால் சுற்றாடலுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இயற்கை அழகுடன் காட்சிதந்த கடற்கரை தற்போது பள்ளம் குழி எற்பட்டு அதனுள் மழைநீர் மற்றும் ஆற்றுநீர் என்பன தேங்கி நிறபதால் டெங்கு நுளம்பு பெருக்கம் மற்றும் துர்நாற்றம் என்பன வீசுகின்றன.
நேற்று மாலை குறித்த இடத்திற்கு ஒய்வெடுப்பதற்காக சென்ற நமது பிரதேச வாசிகள் கடற்கரையின் நிலமைகண்டு மிகவும் கவலையடைந்துள்ளனர்.
எனவே அட்டாளைச்சேனை கடற் பிரதேசத்தில் மண் அகழ்வதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டுமென்பதுடன் மண் அகழ்வில் ஈடுபட்ட நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.