News Update :

Monday, May 8, 2017

TamilLetter

பாலமுனை வைத்தியசாலை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றது:


ஆப்தீன் சுபைதீன்
பாலமுனை வைத்தியசாலை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றது:
இன்று அரசியல் மற்றும் நிருவாக ரீதியாக இவ்வைத்தியசாலையானது திட்டமிட்டு புறக்கணிப்படுகின்றதா என என்னுமளவிற்கு அபிவிருத்தி ரீதியாக பின்னடைந்து கொண்டு வருகின்றது.
மாகாண சுகாதார அமைச்சின் கீழ் நிர்மானிக்கப்பட்டு வருகின்ற ஒரு கட்டடம் பல மாதங்களைக் கடந்தும் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. அண்மையில் இது தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் துரிதப்படுத்தும்படி கூறியிருந்தும் மந்த நிலையிலேயே கட்டுமான வேலைகள் சென்று கொண்டிருக்கின்றன.
அதேபோல், பெண்கள் மற்றும் சிறுவர் விடுதி திருத்த வேலைகளும் இன்னும் முழுமை பெறாத நிலையிலுள்ளது. அதனால், அவ்விடுதியானது இன்னும் இயங்கவில்லை.
அதேபோல் மனித வளம் மற்றும் பௌதீக வளங்களை போதியளவு பெறுகின்ற விடயத்திலும் பிராந்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளால், இவ்வைத்தியசாலையானது புறக்கணிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
அதேபோல், தற்போதைய சுகாதார பிரதியமைச்சர் அவர்களால் வாக்களிக்கப்பட்ட சகல வசதிகளும் அடங்கிய நிருவாகக் கட்டடம் இன்னும் இவ்வைத்தியசாலையை வந்தடையவில்லை.
இவற்றையெல்லாம் துரிதப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட வைத்திசாலை அபிவிருத்திச் சங்கம் பதியப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இதிலுள்ள நபர்கள் அதிகாரமில்லாத சபையாக ஆக்கப்பட்டுள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-