மோடியின் பலத்த பாதுகாப்பை உடைத்து நெருங்கிய நபர்- இலங்கையில் சம்பவம்
இலங்கையில் நடைபெறும் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு புறப்பட்டு வந்தார்
உலகம் முழுவதும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
புத்த பூர்ணிமா திருவிழாவில் பங்கேற்பதற்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டு வந்தார்.
சவால் மிக்க பணியில் ஊடகவியலாளர் ஒருவர் மோடியின் பாதுகாப்பு தடைகளை சாதுர்யமாக தகர்த்து புகைப்படம் எடுத்துள்ளமை பாராட்டத் தக்கது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.