News Update :

Sunday, May 7, 2017

TamilLetter

கைத் தொழில் வர்த்தக அமைச்சை மீளப் பெற்றுக் கொண்டு தபால் தொலைத் தொடர்பு அமைச்சை ரிஷாட் பதியுதீனுக்கு வழங்க உத்தேசம்

முருகேந்தன்
கைத் தொழில் வர்த்தக அமைச்சை மீளப் பெற்றுக் கொண்டு தபால் தொலைத் தொடர்பு அமைச்சை  ரிஷாட் பதியுதீனுக்கு வழங்க உத்தேசம்
அமைச்சரவை மாற்றம் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில், விரைவில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்படாமையே அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடியாமல் போனமைக்கான காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் தற்போது புதிய யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய யோசனை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வேளை நிதியமைச்சு உயர் கல்வியமைச்சு என்பன புதியவர்களுக்கு வழங்கப்பட யோசனை முன் வைக்கப்பட்டுள்ளதுடன்    கைத் தொழில் வர்த்தக அமைச்சை மீளப் பெற்றுக் கொண்டு தபால் தொலைத் தொடர்பு அமைச்சை  ரிஷாட் பதியுதீனுக்கு வழங்க உத்தேசித்துள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-