News Update :

Sunday, May 7, 2017

TamilLetter

அம்பாரை மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் எம்.பி. நியமனம் - அமைச்சர் ரிஷாட் அதிரடி


அம்பாரை மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் எம்.பி.  நியமனம் - அமைச்சர் ரிஷாட் அதிரடி

அப்துல் காதர்
தேர்தலில் வாக்குறுதியளித்ததற்கு இனங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அம்பாரை மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் தனித்து மயில் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது.இதன் போது கட்சிக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் அம்பாரை மாவட்டத்திற்கே வழங்கப்படும் என வாக்குறுதியளித்தார்.

வழங்கப்பட்ட அந்த தீர்மானத்தை நிறைவேற்றும் பொருட்டு சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் தென் கிழக்கு பல்கலைக் கழக உப வேந்தர் கலாதநிதி எஸ்.எம்.எம்.  இஸ்மாயிலுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அம்பாரை மாவட்டத்திற்கு இத்  தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதன்   மூலம்  தனது கட்சியின் செல்வாக்கை இன்னும் அதிகரிக்கலாம் என கட்சித் தலைமை என்னியுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-