இறக்காமத்தில் மூக்குடைபட்ட அதாஉல்லா குழுவினர்- முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஜபீர் மௌலவி
இறக்காமம் பிரதேச மக்களை தங்களது சதிவலைக்குள் சிக்க வைக்க வேண்டுமென்பதற்காக மக்களால் தோற்கடிக்கப்பட்ட அரசியல் வாதிகள் முயற்சி செய்து வருகின்றனர் என்று இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யு.கே.ஜபீர் மௌலவி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று மாலை(21) கிழக்கு மாகாண காணி பாதுகாப்பு அமையம் எனும் பெயரில் அதாஉல்லா,ஹஸனலி ஆகியோரின் தலைமையில் ஒரு குழு இறக்காமத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஒரு கூட்டததை ஏற்பாடு செய்து இறக்காமம் மக்களை அழைத்தனர். ஆனால் இக் குழு எந்த நோக்கத்திற்காக வேஷமிட்டு வந்துள்ளது என்பதை உணர்ந்த மக்கள் இக் கூட்டத்தை பகிஷ்கரித்தனர் இறுதியாக அக்கரைப்பற்று,பாலமுனை,நிந்தவுர்,ஒட்டமாவடி பிரதேசங்களில் இருந்து அவர்களோடு வந்த ஆட்களுக்கே கூட்டத்தை நடத்த வேண்டி ஏற்பட்டது.
அத்தோடு இக் குழு என்ன நோக்கத்திற்காக கூட்டத்தை கூட்டினார்களோ அதற்கு எதிர் மாறாக முஸ்லிம் காங்கிரசுக்கு வச பாடும் கூட்டமாக அது மாறியது..
அதாஉல்லா குழுவினர் நிணைப்பது போன்று இறக்காமம் மக்கள் முட்டாள்கள் அல்ல சமூக துரோகியான அதாஉல்லா போன்றோர்களை மக்கள் ஏற்கனவே துாக்கியெரிந்து விட்டார்கள்.அதாஉல்லா எப்படித்தான் பெல்டி அடித்தாலும் அவரால் ஒரு போதும் மக்களின் மனங்களை வெல்ல முடியாது.
மேலும் அதாஉல்லாவோடு புனிதர்கள் கூட இணைந்திருந்தாலும் அவர்களையும் மக்கள் சாக்கடையாகத்தான் பார்ப்பார்கள்.
வாழ்க்கையின் இறுதித் தருவாயில் இருக்கும் போதே தேசியப்பட்டியல் திகட்டவில்லை என்பது ஆச்சிரியமான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
யார் எதைக் கூறினாலும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் இந்த பேரியக்கத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.இந்த இயக்கம் எங்களின் இரத்தத்தால் வளர்க்கப்பட்டது.ஒரு சுயநல கும்பலின் தேவைக்காக நமது உரிமையை இழக்க முடியாது என மேலும் தெரிவித்தார் முன்னாள் தவிசாளர்.