News Update :

Tuesday, May 23, 2017

TamilLetter

நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ் மற்றும் விவேக் ஆகியோர் மீது வெளிவர முடியாத பிடிவாரண்ட்


நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ் மற்றும் விவேக் ஆகியோர் மீது வெளிவர முடியாத பிடிவாரண்ட்

2009ம் ஆண்டு பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத நடிகர்கள் சூர்யா,சரத்குமார், சத்யராஜூக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
நேரில், ஆஜராக தடைகோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக, நீலகிரியை சேர்ந்த ரிசரியோ என்பவரே இந்த வழக்கினை தொடர்ந்துள்ளார்.
மேலும், இயக்குநர் சேரன், விவேக், அருண் விஜய் உள்ளிட்டோருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-