News Update :

Wednesday, May 17, 2017

TamilLetter

அக்கரைப்பற்றில் பள்ளி உடைத்தால் சொல்லுங்கள் என்றவர் திடீரென கதாநாயகன் ஆனது எப்படி-றிஸ்வி சரீப்


அக்கரைப்பற்றில் பள்ளி உடைத்தால் சொல்லுங்கள் என்றவர் திடீரென கதாநாயகன் ஆனது எப்படி-றிஸ்வி சரீப்

அரசியல் அதிகாரம் ஏன் தேவைப்படுகின்றது என்பதற்கு முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவை பார்த்தால் புரிந்து விடும்.அதாஉல்லா அதிகாரத்தில் இருக்கும் போது கண்டு கொள்ளாத விடயங்களை இன்று தேடிப் போகின்றார்.

அளுத்கம  தீப்பற்றி ஏரியும் போது ஒழித்திருந்தவர்.பள்ளிவாசல் உடைக்கும் போது நபி (ஸல்) அவர்களது காலத்திலும் உடைக்கப்பட்டதுதானே  அக்கரைப்பற்றில் அப்படி பள்ளிகள் உடைக்கப்பட்டால் அப்போ வந்து சொல்லுங்கள் என மேடை போட்டு கூறியவர் இன்று கண்ணீர் வடிக்கிறார்.

அதிகாரத்தில் இருந்து கொண்டு மக்களைப் பார்த்து நீங்கள் வாக்குப் போடத் தேவையில்லை  எனக்கு மலக்குகள் வாக்கு போடுவார்கள்,எனது வாப்பா பார்த்துக் கொள்வார்,என திமீர் பிடித்து அலைந்தவர் சுன்னத்து கல்யானம் வரைக்கும் போக இறைவன் வைத்துள்ளான்.

இன்று வேடிக்கை என்னவென்றால் தானும்  சமூக  அரசியல் செய்ய வேண்டுமென்பதற்காக அவதார பருஷனாக வேடமேற்று  புறப்பட்டு விட்டார்.ஞான சாரா்கள் காலம் கடந்த வில்லனாக அவர் பாத்திரத்தில்  

நல்லாட்சிக்கு எதிராக பேசும் அதஉல்லா நல்லாட்சியின் தலைவரின் கால்களில் விழுந்து கிடக்கிறார்.தலைவர் மாறியிருக்கிறார் கட்சி மாறவில்லை ஆகவே எமது தலைவர் மைத்திரி என்கிறார். அத்தோடு  மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.சில பிரதேச ஒருங்கணைப்பு குழு தலைவர் பதவியை மைத்திரியிடம் பெற்றுள்ளார்.ஜனாதிபதி மற்றும்  அமைச்சர்களை தான்தான் கூட்டிக்கு வந்தேன் என்கிறார்.

அப்படியாக இருந்தால் நல்லாட்சியின் தலைவர் எனது தலைவர் என்று சொல்லும் அதாஉல்லா நல்லாட்சி கூடாதாம் என்கிறார்.அந்த ஆள் சரியல்லை என்றாலும் நாங்கள் அந்த கட்சிதான் ஜனாதிபதிதான் எங்கள் தலைவன் எங்கிறார்.

மக்களே அதாஉல்லாவின் கபட நாடகத்தை புரிந்து கொள்ளுங்கள் இந்த அரசாங்கத்தின் தலைவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று சொல்லும் அதாஉல்லா அணியினர் மைத்திரியின் கட்சியில்தான் தேர்தலில் போட்டியிட்டனர்.அவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.ஜனாதிபதியிடமிருந்து சலுகைகளை பெற்று வருகின்றனர்.ஆனால் ஊருக்கு வந்து நல்லாட்சி கூடாது என்று மேடை போட்டுக் கூறுகின்றனர்.

அதாஉல்லாவிற்கு முடியுமாகயிருந்தால் மைத்திரியிடம் பெற்ற சலுகைகளை கொடுத்து விட்டு மைத்திரக்கு எதிராக இவர்களால் பேச முடியுமா?அந்த கட்சியிலிருந்து விலகிக் கொண்டேன் என்று அறிக்கை விட முடியுமா?

எனவே மக்களே ஜனாதிபதியடமிருந்து எழும்புத் துண்டை பெற நினைப்பது அதாஉல்லாவே தவிர வேறு யாருமில்லை,ஜனாதிபதியோடு இணைந்திருப்பதும் அவர்களே

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-