இன்று அக்கரைப்பற்றில் சேகு இஸ்ஸதீனின் நிகழ்வை அதாஉல்லா தடுத்தார்? இரு தரப்பும் மோதல்
முபாரிஸ்
அக்கரைப்பற்று கடற்கரை பிரதேசத்தில் இன்று நடைபெற இருந்த பாராட்டு விழவை தடுப்பதற்கு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா முயன்று வரவதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர் ஏ.எல்.நஸார் தமிழ் லெட்டர் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
புதிய சட்டத்தரணிகளாக எட்டுப் பேர் அக்கரைப்பற்றில் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் தமது கடமைகளை செய்து வருகின்றனர்.அக்கரைப்பற்றை கௌரவப்படுத்திய இச் சட்டத்தரணிகளை அக்கரைப்பற்று மக்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக முஸ்லிம் தேசிய ஆய்வு மையத்தினால் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் தலைமையில் அக்கரைப்பற்று கடற்கரையில் இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட இந் நிகழ்வை அரசியல் நோக்கத்தோடு உற்று நோக்கிய முன்னாள் அமைச்சர் அதாஉல்லா இவ் நிகழ்வை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்பதற்காக குறிப்பிட்ட சட்டத்தரணிகளின் வீடுகளுக்கு சென்று இதில் கலந்து கொள்ள வேண்டாம் என கூறியுளளார்
பாராட்டபபடும் நிகழ்வில் முரண்பாடுகள் வரக் கூடாது என உணர்ந்த சில சட்டத்தரணிகள் இவ் விழாவில் கலந்து கொள்வதிலிருந்து தவிர்ந்து கொண்டனர்.
அத்தோடு இவ் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு ஆதரவாக முகநுால்களிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக சேகு இஸ்ஸதீனின் ஆதரவாளர்கள் அதாஉல்லாவை திட்டித் தீர்த்து வருவதுடன் செய்தி வெளியிட்ட டுவிட்டர் நிறுவ செய்திப் பொறுப்பாளரோடு மோதலிலும் ஈடுபட்டனர்
அதாஉல்லாவின் அணியினர் எப்படிான கீழ்த்தரமான சதி நடவடிக்கையில் ஈடுபட்டாலும் திட்டமிட்டபடி இன்று மாலை 06மணிக்கு பாராட்டு விழா நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர் ஏ.எல்.நஸார் தெரிவித்தார்