உதைப்பந்தாட்ட வீரா் பெக்கம் தன் மனைவிக்காக என்ன வாங்கியுள்ளார்- நீங்களே பாருங்கள்
பிரபல முன்னாள் கால்பந்து வீரரான இங்கிலாந்தின் டேவிட் பெக்காம், தம்முடைய மனைவியும் முன்னாள் பாடகியும் இந்நாள் பிரபல ஆடை வடிவமைப்பாளருமான விக்டோரியாவுக்கு காதல் நினைவுப் பரிசாக ஒரு தீவை விலைக்கு வாங்கித் தர திட்டமிட்டுள்ளார்.
விக்டோரியாவுடன் காதல் மலர்ந்து 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு தீவைப் பரிசாகத் தர டேவிட் பெக்காம் முடிவு செய்திருப்பதாக இணையச் செய்தி ஒன்று கூறியது.
கரீபியன் கடல் பகுதியில் தீவு ஒன்றை வாங்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். விடுமுறை நாள்களை குடும்பத்தினருடன் அமைதியான கழிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
தனிமைக்குள், யாரும் ஊடுருவதாக ஓர் இடம் வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாகும். செய்தியுலக புகைப்படக்காரர்களின் துரத்தல்கள், ரசிகர்களின் செல்ஃபி தொல்லைகள் இல்லாத வகையில் விடுமுறையை தனது 4 பிள்ளைகளுடனும் கழிக்க அவர் விருப்பம் கொண்டுள்ளார் என அந்த இணையச் செய்தி கூறியது.