News Update :

Tuesday, May 2, 2017

TamilLetter

வாழை நாரில் ஜீன்ஸ் தயாரிப்பு


சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அதேவேளையில், வெப்பத்தைச் சமாளிக்கக்கூடிய வகையிலான வாழைநார் ஜீன்ஸ் தயாரிப்பில் அசத்தி வருகிறது சென்னையை ஒட்டியுள்ள ஒரு பாரம்பரிய நெசவுக் கிராமம்.
அனகாபுத்தூர் என்ற அந்த சிறிய கிராமத்தின் பாரம்பரியத் தொழில் நெசவுதான். மூன்றாவது தலைமுறையினர் தற்போது இந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குள்ள நெசவாளிகள் சமுதாயம் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு உகந்த நூலிழைகளைக் கொண்டு பல்வேறு நெசவுகளை மேற்கொள்கின்றனர்.
இந்தக் கிராமத்தின் மூன்றாம் தலைமுறை நெசவாளிகள், தங்களின் பாரம்பரியத்தைக் காப்பாற்றிக்கொள்ள போராடும் அதேவேளையில், மாறுபட்ட நார் இழைகளைக் கொண்டு புதுமையாக ஆடைகலைத் தயாரிப்பதிலும்  ஈடுபட்டு வருகின்றனர். 
இம்முறை அவர்கள் ஜீன்சுகளை வாழைநார் இழைகளில் இருந்து உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். இது வெப்பத்தை கட்டுப்படுத்துவதாக அமைந்திருப்பதோடு, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் உதவக்கூடியதாக உள்ளது.
வாழைநார் ஜீன்ஸ் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது என்று இவ்வட்டார நெசவாளிகள் சங்கத்தின் தலைவர் சி.சேகர் குறிப்பிட்டார். கபோக் மரத்திலிருந்து எடுக்கப்படும் பருத்தி இழை, வாழை நார் இழை ஆகியவற்றில் இருந்து சேலைகள், மேலாடைகள், சால்வைகள் உருவாக்கப்படுகின்றன. வாழை நாரின் மகத்துவம் அறிந்து தாங்கள் அதில் ஜீன்ஸ் துணிகளை உருவாக்கி வருவதாக அவர் சொன்னார்.
இது பார்ப்பதற்கு பருத்தி இழை போன்று தான் அவை காணப்படும். இதன் வழி ஜீன்ஸ் பாவாடைகளும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கான பொத்தான்கள் கூட உலோகத்தால் செய்யப்படுவதில்லை. மாறாக, கொட்டாங்குச்சிகளால் தயாரிக்கப்படுகின்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-