அதாஉல்லா அட்டாளைச்சேனைக்கு செய்த காரியம்
-திடுக்கிடும் தகவல்
குல்ஸான்
மஹிந்த ஆட்சியில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சராகயிருந்த ஏ.எல்.எம். அதாஉல்லா தீகபாவியை தனி பிரதேச சபையாக மாற்றுவதற்கு இணங்கியிருந்தார் எனும் அதிர்ச்சி தகவல் மக்கள் மத்தியில் தீயாக பரவியுள்ளது .
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட தீகபாவி,ஆலீம்நகர் ,சம்புநகர்,ஆலம்குளம் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பிரதேச சபையை உறுவாக்க வேண்டுமெனவும் இதன் மூலமே பழமை வாய்ந்த புராதன புனித புமியை பாதுகாக்க முடியுமென முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.இப் பிரேரணையை முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடாக அமைச்சரவையில் சமர்ப்பிப்தற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது .
மேலும் இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களான ஜீ.எல்.பீரீஸ்,பந்துல குணவர்த்தன,பீ.தயாரட்ண ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு திட்ட வரைவு தொடர்பான வேலைத்திட்டங்களுக்காக பணிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது .
முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த தமிழர்களுக்கான கல்முனை வடக்கு பிரதேச சபை ,சாய்ந்தமருது நகர சபை ஆகிய புதிய பிரதேச சபைகளை அமைப்பது தொடர்பான பிரேரணையில் தீகபாவி பிரதேச சபையையும் பிரேரணையில் இணைத்துக் கொள்ளுமாறு திகபாவியின் திட்ட வரைவை அதாஉல்லாவிடம் இக் குழு சமர்ப்பித்திருந்தது.
அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில இருந்த போது முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தேர்தல் நடைபெறவுள்ளதால் இப் போதைக்கு இப் பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டாமென அதாஉல்லாவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஜனாதிபதியாக வந்திருந்தால் அட்டாளைச்சேனை இரண்டு பிரதேசமாக பிரிக்கப்ட்டிருக்கும் ஆபத்தை இறைவன் காப்பாற்றியுள்ளான்.