மஹிந்த ராஜபக்ஸவுக்கு சுதந்திரக் கட்சியே ஆப்பு வைத்தது -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவிக்கு போட்டியடாத வகையில் நிறைவேற்ற ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் கொண்ட அரசியலமைப்பு செயற்பாட்டு குழுவில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்து கொண்டார்.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் குழு உறுப்பினர்களிடம் தகவல் வெளியிட்டார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும் இரு முறை நாட்டை ஆட்சி செய்த ஒருவர் மீண்டும் அதிகாரத்திற்கு வராத வகையில் மாற்றம் செய்ய வேண்டும். இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்பட்டதன் பின்னர், அரச தலைவராகும் வாய்ப்பு ஏற்படும்.
இந்நிலையில் அரசியலமைப்பு அதிகாரத்திற்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவி பெற்றுக் கொள்வதனை தடுப்பதே குறித்த யோசனையின் நோக்கமாகும்.
எப்படியிருப்பினும் இந்த யோசனை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தங்களின் இறுதி முடிவை அறிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இழந்த அதிகாரத்தை மீள பெற்றுக்கொள்ளும் நோக்கில் தனிக் கட்சி ஒன்றை ஆரம்பித்து, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.