News Update :

Thursday, May 4, 2017

TamilLetter

வாய்ப்பை இழக்கும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள்



வாய்ப்பை இழக்கும்   முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள்

குல்ஸான்
இக்கட்டான  அரசியல் சுழ்நிலை ஏற்பட்ட காலங்களிலும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றி வந்துள்ளது.

இன்று அக்கட்சியில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபையின் முக்கிய உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகின்றனர்.

முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில்,ஐ.எல்.மனாப்,டீ.ஐ.ஜீ நஸீர் ஆகியோர் கட்சியின் தலைவர் மாற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

இச் சந்தர்ப்பத்தில் எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவர்களுக்கான போட்டியிடும் வாய்ப்பை இல்லாமல் செய்வதற்கு முடிவு செய்துள்ளது.அத்தோடு இவர்கள் மாற்றுக் கட்சியில் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் அவர்களை படுதோல்வியடைச் செய்வதற்கான  வழிமுறைகளையும் கையான்டு வருகின்றது.

முன்னாள் தவிசாளர் அன்ஸில் இடை விலகியதையடுத்து அடுத்த அட்டாளைச்சேனையின் தவிசாளர் வேட்பாளராக ஓலுவிலைச் சேர்ந்த அமானுல்லாவை நியமிப்பதற்கும் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

அதே வேளை கோணவத்தை 08ம் பிரிவு அரபா வித்தியாலய வட்டாரத்தில் போட்டியிடுவதற்கான  பிரதான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ்.தமீம் ஆப்தீன் ஆகியோருக்கிடையில் பலத்த போட்டி காணப்படுவதாகவும் ஒருவரை  ஒருவர் முகநுால் வாயிலாக தாக்கி வருவதாகவும்    அறிய முடிகிறது.இதில் ஒருத்தர் புறக்கனிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அன்ஸிலின் தரப்புக்கு மாறுவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாக காணப்படுகின்றது.

அன்ஸிலின் கோட்டையாக விளங்கும் பாலமுனை பிரதேசத்தில் அன்ஸிலை தோற்கடிப்பதற்கு  முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு ஒரு முக்கிய நபர் முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் உறுப்பினர்களான எம்.எல்.கலீல்,ஏ.எஸ்.எம்.உவைஸ் ஆகியோர் கடந்த இரண்டு தேர்தல்களிலும் நேரடியான வெற்றியை பெறவில்லை என்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது இவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் களமிறக்கப்படுவதற்கானவாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

தைக்கா நகர் பிரதேசத்தில் போடடியிட்ட ஐ.எல்.நஸீர் நேரடியான வெற்றியைப் பெறாத சந்தர்ப்பத்திலும் ஒரு குறிப்பிட்ட காலம் பிரதேச சபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.இவருக்கு எதிரான புதிய முகத்தை தைக்கா நகர் பிரதேசத்திலிருந்து  அறிமுகப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தல் அட்டாளைச்சேனையில் பாரிய சங்கடங்களை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-