News Update :

Monday, May 8, 2017

TamilLetter

'யானைப் பசிக்கு சோளப் பொரியே' பொத்துவில் உப வலயம் - ஏ.எல். தவம் மா.ச.உ........


'யானைப் பசிக்கு சோளப் பொரியே' பொத்துவில் உப வலயம் - ஏ.எல். தவம் மா.ச.உ........

இன்று (08) பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்இ பிரதி சுகாதார அமைச்சரான பைசல் காசிம் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி கூட்டத்தில் பொத்துவில் உப வலயத்திற்கு அன்மையில் வழங்கப்பட்ட அதிகாரங்களை செயற்படுத்துவதில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக முன்னாள் பிரதேச தவிசாளர் மர்சூக் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.

மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குக் கூட இவ்வதிகாரங்களை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதில் தெளிவில்லாத கருத்தே இருப்பதாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் முபாறக் கூறினார்.

ஒரே கடிதத்தை மூன்று தடவைகள் விழாக்கள் வைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்இ வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் முதலமைச்சர் போன்றோர் வழங்கிய போதும் அதிகாரம் ஒன்றுமே இல்லையா என மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். உதுமாலெவ்வை கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட மாகாண சபை உறுப்பினர் தவம்இ பொத்துவில் உப வலயம் என்பது என்னைப் பொறுத்த வரை 'யானைப் பசிக்கு சோளப்பொரி' போன்றது எனக் கூறினார். பொத்துவில் உப வலயம் ஒரு கண் துடைப்பு. இதனை வைத்து ஒரு நாளும் பொத்துவில் கல்வியை அபிவிருத்தி செய்ய முடியாது. இதனை பொத்துவில் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது. தனியான வலயமே எங்களுக்கு வேண்டும் என்று ஒற்றைப் பிடியில் நின்றிருக்க வேண்டும்.

பொத்துவில் உப வலயம் அதிகாரமற்றதாகவே இன்னும் இருப்பதாயின் அது எதற்கு? உங்களுக்கு உண்மையான விமோசனம் தனி வலயமாக அமைவதிலேதான் இருக்கிறது. அப்போதுதான் பொத்துவிலுக்குத் தேவையான வளங்களை சுதந்திரமாக நீங்கள் பெறலாம். வளங்களிலிருந்து உச்ச பயனைப் பெறலாம்.

இதனை நான் எப்போதும் எல்லா சபைகளிலும் கூறி வந்திருக்கிறேன். நீங்கள் அதை விளங்காமல் என்னை நேகடிப்பீர்கள். அதற்காக நான் என் நிலைப்பாட்டிலிருந்து மாற மாட்டேன். மீண்டும் வலியுறுத்துகிறேன். உப வலயம் ஒரு கண்துடைப்பே. தனி வலயம் மாத்திரம்தான் உங்களுக்கான தீர்வு.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-