News Update :

Wednesday, May 10, 2017

TamilLetter

சமூகத்தைக் காட்டிக் கொடுத்த சேவலங்கா மஜீதிடம் நாகரிகத்தை எப்படி எதிர் பார்ப்பது.?


சமூகத்தைக் காட்டிக் கொடுத்த சேவலங்கா மஜீதிடம் நாகரிகத்தை எப்படி எதிர் பார்ப்பது.?

பெருந் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அவமானப்பட்டு தான் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூட இராஜீனமா செய்தது பொத்துவில் பிரதேச சபை தோற்றதன் விளைவாகத்தான் என அல்- மதினா சமூக சேவை நிறுவனத்தின் தலைவர் மௌலவி சுபையீர் தெரிவித்தார்.

கடந்த வாரம்  நடைபெற்ற பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொத்துவிலைச் சேர்ந்த சேவலங்கா அப்துல் மஜீத் தரங் கெட்ட வார்த்தைப் பிரயோகங்களால் பிரதியமைச்சர் பைஸல் காசீமை தீட்டித் தீர்த்தார்.

ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு ஒரு சபையில் இப்படி கீழ்த்தரமாக செயற்படும் ஒரு நபரிடம் மாணவர்கள் எதைக் கற்கலாம் என கேள்வியெழுப்பினார்.

கடந்த மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து கொண்டு பொத்துவில் பிரதேசத்தை பௌத்த புமியாக்க துணை நின்றார்.

விமலவீர திஸாநாயக்கா,சரத் வீரசேகரமற்றும் மஹிந்த ஆகியோர் வழங்கும் சில்லறைக் காசிகளுக்கு  சன்மானமாக முஸ்லிம் தலைவர்களை இகழ்ந்து பேசுகின்றார்.

இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடும்  முஸ்லிம் சமூக விரோதியான இந்த மஜீதீன் செயற்பாடுகளை பொத்துவிலுள்ள கல்வி சமூகம் ஏற்றுக் கொள்கின்றதா?

மண் கொள்ளை அடிப்பதற்காக சட்டத்துக்கு முரணான வகையில் ஆவணங்களை தயாரித்ததை பொலிஸார் கண்டு பிடித்ததை மூடி மறைக்கவே கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வேடம் தரித்தார்.

இருந்தும் இந்த ஆவணங்கள் முறையற்றது என பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த உயர் சபையில் தெரிவித்தார்.

இப் பிரச்சினையை வேறு திசை நோக்கி திருப்புவதற்காகவே பிரதியமைச்சர் பைஸல் காசிமோடு முரண்பட்டு பிரதேச வாதத்தை துாண்டினார்..

தலைவர் அஷரபை்புக்கு எதிராகவே நயவஞ்சமாக செயற்பட்டு பழி சுமத்தி பிரதேச சபைத் தேர்தலில் தோற்கடித்தவர்கள் பிரதியமைச்சர் பைஸல் காசீமுக்கு எதிராக செயற்படுவதை நாம் ஆச்சிரயமாக பார்க்கத் தேவையில்லை

 இருந்தும்  சேவ லங்கா மஜீத் நினைப்பது போல் பொத்துவில் மக்கள் அவருக்கு ஆதரவாக ஒரு போதும் இருக்க மாட்டார்கள்.



எதிர் காலத்தில் வட்டார தேர்தல் முறையில் பிரதேச சபை நடைபெறவுள்ளது.முடிமென்றால் அவரால் ஒரு பிரதேச சபை உறுப்பினராகி காட்டட்டும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-