News Update :

Monday, May 1, 2017

TamilLetter

ஐஎஸ் பயங்கரவாதியை மணந்த எப்.பி.ஐ பெண் அதிகாரி! -அதிர்ச்சித் தகவல்


மெரிக்காவின் எப்பிஐ புலனாய்வுத் துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர், சிரியாவிலுள்ள ஐஎஸ் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவனை மணந்து கொண்டிருந்த சம்பவம் இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
எப்பிஐ புலனாய்வு அமைப்பில் மொழி பெயர்ப்பாளராக இருந்து வந்த டெனில்லா கிரீன் (வயது 38) என்பவர் 2014ஆம் ஆண்டில் சிரியாவுக்கு பயணம் செய்யவும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளி குறித்து புலனாய்வு நடத்தவும் அனுமதிப்பட்டிருந்தார்.
ஆனால், யாரைப்பற்றி புலனாய்வு நடத்த அனுப்பப் பட்டாரோ, அதே நபரை பின்னாளில் அவர் திருமணம் செய்து கொண்டு சில காலம் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜெர்மனியைச் சேர்ந்த பாடகனான டெனிஸ் கஸ்பெர்ட் என்ற நபர் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதக் கும்பலில் சேர்ந்து செயல்பட்டு வந்தான். அந்த இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் தற்போது இருந்தவரும் அந்த நபர் குறித்து புலன் விசாரணை செய்யவே டென்னில்லா கிரீன் அனுப்பப்பட்டார்.
இணையம் மூலமாக இயக்கத்திற்கு ஆள் திரட்டுவதுதான் கஸ்பெர்ட்டின் வேலையாகும். சிரியாவில் கஸ்பெர்ட்டிற்கு அபு தல்ஹா அல் அல்மனி என்ற பெயர் உண்டு. பல்வேறு பிரசாரக் காணொளியில் தோன்றியுள்ள இவன், முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு எதிராக மிரட்டல் விடுத்தவன். மற்றொரு வீடியோவில் துண்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் தலையுடன் காட்சி தந்தவன்.
இவனது நடவடிக்கைகள் குறித்து புலனாய்வு செய்ய அனுப்பட்ட எப்பிஐயைச் சேர்ந்த டென்னிலா கிரீன், பின்னர் அவனையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். மேலும் எப்பிஐ அவனைக் கண்காணிக்கிறது என்ற தகவல் உள்ளிட்ட பல தகவல்களை அவனுக்குத் தெரிவித்துள்ளார்.
ஆனால், சில மாதங்கள் கழித்து, வாழ்க்கை சிக்கலாகவே தனது தவறை உணர்ந்து அங்கிருந்து தப்பி அமெரிக்கா வந்தார். அவர் தாயகம் வந்து சேர்ந்தவுடனேயே புலனாய்வுத்துறை அவரை கைது செய்தது. இவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அண்மையில் தான் தண்டனை முடிந்து விடுதலையாகி உள்ளார்.
இது குறித்த தகவல்களை எப்பிஐ இரகசியமாகவே வைத்திருந்தது. ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் புலன் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் எப்பிஐ அமைப்பின் அதிகாரியே ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தது தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டதால் இது குறித்து இவ்வளவு காலமும் இரகசியமாக காக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-