News Update :

Saturday, May 6, 2017

TamilLetter

இப்படியும் ஒரு பிக்கு - வீடியோ

இப்படியும் ஒரு பிக்கு - வீடியோ
- உட கொஹோவில விகாரையில் வசிக்கும் வேஹெரயாயே விமலசார தேரர் நீரில் மூழ்கிய நபரொருவரை காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதுடன், தேரர் காப்பாற்றியுள்ள விதம் தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
ஜயகங்கையில் நபரொருவர் நண்பர்களுடன் நீராட சென்றுள்ளார். நீராடும் போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த தேரர் கடும் முயற்சியின் பின்னர் குறித்த நபரை காப்பாற்றியுள்ளார். இதனை ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-