News Update :

Thursday, May 4, 2017

TamilLetter

தவத்தின் முயற்சியில் 85 இலட்சம் ஒதுக்கீடு; பள்ளிக்குடியிருப்பு வைத்தியசாலை நவீனமயமாகிறது


கிழக்கு மாகாண சபையூடாக அமுல் நடாத்தப்படும் சுகாதார சேவைகள் அபிவிருத்தித் திட்டத்தின் (HSDP) கீழ் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு வைத்தியசாலை அபிவிருத்திக்கு 85 இலட்சம் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் விவகார வேலைவாய்ப்புச் செயலாளருமான ஏ.எல்.தவம் அவர்களின் முயற்சியால் ஒதுக்கப்பட்டுள்ள இந்நிதியினூடாக மேற்படி வைத்தியசாலையின் கட்டிடப் பற்றாக்குறை நீங்கவுள்ளதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

ஏலவே இவ்வைத்தியசாலைக்கென தற்போதுள்ள கட்டிடமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நிதியில் கட்டப்பட்டதாகவும், மீண்டும் அதே கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தவத்தின் காலத்தில் புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளதாகவும் அப்பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீண்டகாலமாக இலுக்குச்சேனை, பறக்கத் நகர், ஆலிம் நகர், இசங்கேணிச்சீமை போன்ற தூரப்பிரதேசங்களிலிருந்து இவ்வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் மக்கள் வெயிலிலும் மழையிலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளான போதும் எவரும் கவனிக்கவில்லை எனவும், முஸ்லிம் காங்கிரஸினூடாக தற்போது இதற்கு வழி பிறந்துள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள்.


இம்முயற்சியைச் செய்த உறுப்பினர் தவம், உதவி செய்த மாகாண அமைச்சர் நசீர், பிராந்திய சுகாதார பிரதிப் பணிப்பாளர் அலாவுதீன் ஆகியோருக்கு அவர்கள் நன்றியையும் தெரிவிக்கின்றனர். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-