News Update :

Monday, May 8, 2017

TamilLetter

நல்லாட்சியில் 7 பேருக்கு 32 கோடி


நல்லாட்சியில் 7 பேருக்கு 32 கோடி

ஆறு அமைச்­சர்­க­ளுக்கும் ஆளுநர் ஒரு­வ­ருக்கும் பிர­தமரின் செய­லாளர் ஒரு­வ­ருக்கும் வாக­னங்கள் கொள்­வ­னவு செய்­வ­தற்கு 32 கோடியே 98 இலட்­சத்து 31 ஆயிரம் ரூபா கோரி ஆளும் கட்­சியின் பிர­தம கொற­டாவும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக சபையில் குறை நிரப்பு பிரே­ரணை ஒன்றை சமர்ப்­பித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் வெள்­ளிக்­கி­ழமை ஆளும் தரப்­பினால் குறித்த குறை­நி­ரப்பு பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டது.
இந்த குறை­நி­ரப்பு பிரே­ர­ணையின் பிர­காரம் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்­ச­ர், கடற்­தொழில் மற்றும் நீரியல் வளத்­துறை அமைச்­ச­ர், தேசிய நல்­லி­ணக்கம், சக­வாழ்வு மற்றும் அரச கரு­ம­மொழி அமைச்­ச­ர், நகர திட்­ட­மிடல் மற்றும் நீர் வடி­கா­ல­மைப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ர் திறன் அபி­வி­ருத்தி அமைச்­ச­ர் ஆகியோருக்கு வாகனங்களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு மேற்­கு­றித்த குறை­நி­ரப்பு பிரே­ரணை சமர்ப்பிக்­கப்­பட்­டது.
அத்­துடன் பிர­த­மரின் பாரா­ளு­மன்ற விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கும் குறித்த பிரேரணையில் வாகனம் கொள்வனவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-