News Update :

Monday, May 1, 2017

TamilLetter

கடற்கரையில் இராட்சத அலையில் சிக்கிய 4 பெண்கள்


கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 4 பெண்கள் நேற்று மாலை இராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடற்கரையில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
எனினும் , 21 வயதுடைய யுவதியொருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்.
இவர்கள் சிலாபம் – இலிப்பதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
காணாமல் போன யுவதியை தேடி காவல்துறையினர் , கல்பிடிய கடற்படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயற்பட்டு வருவதாக எமது செய்தியாளர ்தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-