பண்ணையில் தீ! 28,000 கோழிக் குஞ்சுகள் பலி!
மாரானிலுள்ள கம்போங் ரிம்புன் என்ற இடத்தில் இருந்த கோழிப் பண்ணையில் தீப்பிடித்ததில் கிட்டத்தட்ட 28,000 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி மடிந்தன.
எனினும், தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் மேலும் பல ஆயிரம் கொழிக் குஞ்சுகள் மடிவதில் இருந்து காப்பாற்றப் பட்டன.
அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைவதற்குள் சுமார் 16ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் இருந்த அந்தக் கோழிப் பண்ணையின் ஒருபகுதி அழிந்துவிட்டது.
இங்கு வைக்கப்பட்டிருந்த 28,000 கோழிக் குஞ்சுகள் தீயில் மடிய நேர்ந்தது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் அடுத்தடுத்து தீப் பரவாமல் தடுத்தனர். இதனால், மேலும் பல ஆயிரக்கணக்கான கோழிக் குஞ்சுகள் தீயில் மடிவதிலிருந்து காப்பாற்றப்பட்டன.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மேலும், இதனால் ஏற்பட்ட இழப்பு குறித்தும் முழுவிபரம் தெரியவில்லை.