மஹிந்தவுக்கு 18கோடி கொடுத்த நமது வர்த்தகர்கள் - புலனாய்வுப் பிரிவு அறிக்கை
கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் சீனா, பாகிஸ்தான் நாடுகள் மாத்திரமல்லாது மேலும் 18 கோடி ரூபாவை சேகரித்து கொடுத்த இலங்கையின் சில வர்த்தகர்கள் சம்பந்தமாக புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் வர்த்தகர்கள் சம்பந்தமான புலனாய்வு பிரிவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அமைய நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பு மற்றும் பெருநகர திட்டங்கள் உட்பட நிர்மாணிப்பு துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சில செல்வந்த வர்த்தகர்கள் தலா ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
அத்துடன், இலங்கையில் குடிநீர் போத்தல் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்று நிதியுதவிக்கு பதிலாக ஒரு லட்சம் குடிநீர் போத்தல்களை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்கியுள்ளது.
புலனாய்வு பிரிவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சில வர்த்கர்களை, சில முக்கிய அமைச்சர்கள் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தனது ஆட்சிக்காலத்தில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவியதை எண்ணிப்பார்த்து மே தினக் கூட்டத்தில் நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அதனடிப்படையில் தாம் நிதியுதவியை வழங்கியதாக வர்த்தகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.