News Update :

Thursday, May 4, 2017

TamilLetter

கிழக்கு மாகாணத்தில் 1000 பட்டதாரிகளுக்கு நியமனம் - மாகாண சபை உறுப்பினர் தவம்



கிழக்கு மாகாண 1000 பட்டதாரிகளுக்கு முதற்கட்டமாக மூப்பு அடிப்படையில் அரச திணைக்களங்களில் நியமனம் வழங்குவதற்கு  அனுமதி கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக போராட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகள் ஈடுபட்டு வருவது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன்    அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவுப் ஹக்கீம் குழுவினர் மேற்கொண்ட பேச்சு வார்த்தையில் பலனாக இத் தீர்மானம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது பட்டதாரிகளுக்கான  வேலை வாய்ப்புத் தொடரில் சில   முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.அந்த வகையில் 2012ம் ஆண்டு பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதெனவும் இன்னும் சில குறிப்பிட்ட தொகையினருக்கு தகவல் தொழில்நுட்பப் பயிற்சியை வழங்கி ஆரம்பத்தில் பயிற்சியாளராக நியமிப்பதுடன் பின்னர் தகுதி அடிப்படையில் நியமனங்கள் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.





TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-