News Update :

Friday, May 12, 2017

TamilLetter

தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற 100 டன் ரெயிலை தள்ளிய பயணிகள்..!


தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற 100 டன் ரெயிலை தள்ளிய பயணிகள்..!


சீனாவில் குவாங்ஷு மாகாணத்தில் சுரங்க ரெயில் சென்று கொண்டிருந்தது. அது வழியில் ஒரு ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது அதில் இருந்து இறங்கிய 72 வயது பெண் தவறி விழுந்தார்.

அவர் ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி கொண்டார். இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே ரெயில் பயணிகள் விரைந்து சென்று ரெயில் புறப்படாமல் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், அந்த பெண்ணை வெளியே இழுத்து தூக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. எனவே ரெயில் பயணிகள் அனைவரும் பெட்டிகளில் இருந்து கீழே இறங்கினர்.

பெண் சிக்கியிருந்த ரெயில் பெட்டியை அனைவரும் ஒன்று சேர்ந்து பக்கவாட்டில் கீழே தள்ளி சாய்த்தனர். அந்த ரெயில் பெட்டி 100 டன் எடை இருந்தது.

ஒரு வழியாக ரெயில் பெட்டியை சாய்த்தபின் சிக்கி கிடந்த பெண்ணை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

அது செல்போனில் வீடியோ ஆக எடுக்கப்பட்டு பின்னர் அது சமூக வலை தளங்களில் வைரல் ஆக பரவியது. அதை ஏராளமானவர்கள் பார்த்து ஆச்சரியப்பட்டனர். பெண் உயிருடன் மீட்கப்பட்டதை பாராட்டினர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-