News Update :

Tuesday, April 11, 2017

TamilLetter

உறைபனியில் உயிரைப் பணயம் வைத்து நாயைக் காப்பாற்றிய எஜமானர்! -(VIDEO)


பனி உறைந்து கிடக்கும் குளம்... அதில் சிக்கிக் கொண்டு வெளியே வரத் தத்தளிக்கும் நாய்..., அதைப் பார்த்துப் பதறிப்போன உரிமையாளர் டங்கன் மெக்கிவர், உயிரைப் பணயம் வைத்து பனி உறைந்த குளத்தில் குதித்து தனது நாயைக் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
###காணொளி: நன்றி Pets & Animals###
கனடாவில் அல்பெர்ட்டோ என்ற இடத்தில் இந்தத் துணிகரச் சம்பவம் நடந்தது. செயிண்ட் அல்பெர்ட் என்ற பூங்காவிலுள்ள உறைபனிக் குளத்தில் சிக்கிக் கொண்ட அந்த நாயைக் காப்பாற்ற குளத்தில் குதித்த அதன் உரிமையாளர் டங்கன், நாயை மீட்டுக் கொண்டு திரும்பும் போது பனிப் படிவம் உடைந்து குளத்தில் மூழ்க நேர்ந்தது. இருப்பினும், மீண்டும் எழுந்து அவர் நாயுடன் பத்திரமாக கரை சேருகிறார்.
"அந்த நேரத்தில் நான் செய்தது சரியென்றே நினைக்கிறேன். இப்படியொரு ஆபத்தான சூழலில் தாம் அன்புடன் வளர்த்த நாய் சிக்கிக் கொண்டு தவிப்பதை யாராலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்று அவர் சொன்னார்.
இந்தச் சம்பவம் நடந்த இடத்திலிருந்த மற்றொருவர் இந்தக் காட்சியை வீடியோவில் பதிவு செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பரவிய போது அந்த நபரின் துணிச்சலையும் மனிதாபிமானத்தையும் பலரும் வெகுவாகப் பாராட்டினர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-