News Update :

Friday, April 21, 2017

TamilLetter

ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த்?


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்து எடுக்க பிரதான அரசியல் கட்சிகள் இப்போதே ஆலோசனை நடத்த தொடங்கி இருக்கின்றன.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பீகார் முதல்-மந்திரியும்,ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ்குமார் சந்தித்து பேசி உள்ளார். புதிய ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ.க. தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,ஜார்க்கண்ட் மாநில பெண் கவர்னர் திரவுபதி முர்மும், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.
அதே போன்று தென்னிந்தியாவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் பெயரும், தொழில் அதிபர் “இன்போசிஸ்” நாராயண மூர்த்தி பெயரும் ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகிறது. இந்த இருவரது பெயர்களையும் பா.ஜ க. ரகசியமாக வைத்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி பிரபல “இந்தியா டுடே” ஆங்கிலப் பத்திரிக்கையில் “THE NEXT FIRST CITIZEN”என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிசீலனையில் இருப்பதாக வரும் செய்திகள், தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-