திங்கள்கிழமை வெளிவந்த குழந்தை மருத்துவ சஞ்சிகை ஒன்றில் முதல் மூன்று மாத கால பகுதியில் திருப்தி படுத்த முடியாத மற்றும் வலி பரவியுள்ள விகிதங்கள் அதிகமாக காணப்படும் பிள்ளைகள் அதிகமாக காணப்படும் உலக நாடுகளில் கனடாவும் அடங்குகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்கா, ஐரோப்பாவின் சில பாகங்கள், அவுஸ்ரேலியா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வு- ஆய்வுகளை மையமாக கொண்டு நடாத்தப்பட்ட- கனடாவில்- 8,650ஆரோக்கியமான சிறு குழந்தைகள் உட்பட்ட-ஆய்வு தெரிவிப்பதாக கூறப்படுகின்றது.
ஒரு மாத கணிப்பில் கனடிய பேபிகள் ஒரு நாளில் 150நிமிடங்கள் பரபரப்பாக அல்லது அழுதவண்ணம் உள்ளனரென தெரியவந்துள்ளது. ஒட்டு மொத்த சராசரியோடு ஒப்பிடுகையில் 118 நிமிடங்கள். கிழமையில் குறைந்தது மூன்று நாட்கள் மணித்தியாலத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் அழுகின்றன.
இவர்களது உச்ச அழுகை மற்றய நாடுகளில் ஐந்து முதல் ஆறுவாரங்களாக இருக்கையில் கனடிய குழந்தைகளினது மூன்று முதல் நான்கு வாரங்களாக இருக்கின்றன எனவும் கூறப்படுகின்றது.
நாடுகளை தரப்படுத்த ஆய்வாளர்கள் இதனை செய்யவில்லை இத்தகைய அழும் தன்மைக்கு ஆதாரங்கள் ஏதும் இருக்கின்றனவா என கண்டறியும் முயற்சி தான எனவும் கூறப்படுகின்றது.
ஏன் இந்த வித்தியாசம்.?
இதே நேரம் முதல் மூன்று மாதங்கள் சில குழந்தைகள் மற்றவர்களை விட அதிகமாக அழுவது மிகவும் சாதாரணமானது. இது பெற்றோர் சிறந்தவர்கள் அல்லது மோசமானவர்கள் என்பதல்ல எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.