News Update :

Sunday, April 2, 2017

TamilLetter

முன்னாள் தவிசாளர் வாஷீத் ரிஷாட் அணியில் இணைவு.- முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன்

எம்.றாசீத்

பொததுவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாள் ஏ.எம்.வாஷீத் மிக விரைவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்வார்.அதற்கான மறைமுகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தமீம் ஆப்தின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நடாத்த்தப்படும்   கூட்டத்தில் ஒரு சிறிய குழு குழப்ப வருகின்றதென்றால் அதை கட்டுப்படுத்த  வக்கில்லாமல் குழப்பவாதிகளுக்கே ஆதரவாக பேசியது கட்சியையும் தலைமையையும் இக்கட்டான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

பொத்துவில் மக்களில் ஒரு சிலர்   எப்போதுமே நன்றி கெட்டவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஸீஸ் அவர்களுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கி பொத்துவிலை கௌரவித்தது.கிழக்கு மாகாண சபையின் முதலாவது தேர்தலில் அப்துல் மஜீட் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் இவற்றையெல்லாம் மறந்து எங்களுக்கு அதிகாரமில்லை முஸ்லிம் காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று கூச்சலிடுகின்றனர்.

பொததுவிலை விட அதிக வாக்காளர்களைக் கொண்ட அட்டாளைச்சேனை நுாறு வீதம் 30 வருடங்களாக   முஸ்லிம் காங்கிரசுக்காக வாக்களித்து வந்த போதும் இன்னும் தேசியப்பட்டியல் வழங்கப்படவில்லை, பொத்துவில் பிரதேசத்திற்கு பிற்பாடுதான் மாகாண சபை உறுப்பினர் பதவியைக்   கூட நாங்கள் பெற்றோம்.அதற்காக எமது மக்கள்   கட்சியை விட்டு போகவில்லை உங்கள் மாதிரி தலைவரை அவமானப்படுத்தவில்லை,கூட்டத்தை குழப்பவில்லை என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இப்படியான வரலாற்று பதிவுகள் இருந்து கொண்டு இருக்கும் நிலையில கட்சிககு எதிரான   மக்கள் துள்ளிக் குதிப்பதில் எந்த நியாமும் இல்லை.

பிரதியமைச்சர் பைஸல் காசீம் பொத்துவில் பிரதேசத்திற்கு எவ்வளவோ வேலைத்திட்டங்களை செய்த போதும ஒரு நிமிடத்தில் அவரை அவமானப்படுத்தினீர்கள் இதுதான் உங்களுடைய நாகரிகமா?

எதற்கெடுத்தாலும் பொத்துவிலுக்கு வெளியுரான் வரக் கூடாது என்று சொல்கிறீர்களே அப்ப நீங்கள் கோமாரியான்,பாணாமையானோடு சேர்ந்து அரசியல் செய்யலாமே?

நீங்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு பொத்துவிலிருந்து 5 ஆயிரம் வாக்குகள்தான் கிடைக்கின்றது அந்த வாக்குகளுக்கு அதிகமாகவே கட்சி செய்துள்ளது.பொத்துவில் ஒட்டுமொத்த வாக்குகளை கழித்தாலும் 70 ஆயிரம் வாக்குகள் முஸ்லிம் காங்கிரசுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

எஸ்.பி மஜீத்திக்குத்தான் நீண்ட காலமாக வாக்களித்து வருகின்றீர்கள் அவரிடம் போய் எல்லாவற்றையும் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்தானே .

பொத்துவிலில்  கட்சியை வழிநடத்துகின்றவர்கள் கோமாளிகளாக உள்ளீர்கள் குழப்ப வருகின்ற 5பேரையும் அடக்க துப்பிள்ள அதற்குள் வீர வசனம் பேசுகின்றீர்கள்.

இருக்கின்ற கட்சிக்கு விசுவாசமாக இருங்கள் நேர்மையாக நடங்கள்,என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தின் கூறினார்.









TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-