News Update :

Wednesday, April 26, 2017

TamilLetter

மன்னாரில் தலைவர் ஹக்கிமுடன் தவம் களத்தில்



Raspi Faseer 


அபிவிருத்தி அழகுமன்னார், முசலி பிரதேச செயலக பிரிவில் வேப்பம்குளம் கிராமத்தில் நீர் சுத்திகரிப்பு தொகுயை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (27) மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.

அத்துடன் வேப்பம்குளம் ஜும்ஆ பள்ளிவாசலில் பிரதேச வாசிகளையும் சந்தித்து அமைச்சர் கலந்து உரையாடினார். இதன்போது தமது நீண்ட கால தேவையாகக் காணப்பட்ட தூய குடி நீரை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு பிரதேசவாசிகள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில்  மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ், ஏ.எல். தவம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், எம்.பி. பாருக் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும்   கலந்துகொண்டனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-