News Update :

Saturday, April 22, 2017

TamilLetter

இன்று பாலமுனையில் ஜவாத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியிடுகிறார் அன்ஸில்



மரத்தின் வேர்களுக்கு விளம்பல் எனும் தலைப்பிலான மாபெரும் பொதுக் கூட்டம் இன்று மாலை பாலமுனை  பிரதான வீதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கிமுக்கு எதிராக இவ்வளவு காலமாக செயற்பட்டு வந்த மாகாண சபை உறுப்பினர் கல்முனை ஜவாத் திடிரென அவருக்கு ஆதரவாக செயற்படுவதன் மர்மம் என்ன என்பதை  இக் கூட்டத்தில கலந்து கொண்டு மக்களுக்கு விளக்கவுள்ளார்  எம்.ஏ.அன்ஸில்

ஆரம்ப காலத்தில் ஹஸனலிக்கு எம்.பி வழங்கப்பட வேண்டுமென்று போராடி ரவுப் ஹக்கிம்  இச் சமூகத்திற்கு பொருத்தமற்றவர் அன்ஸிலை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது  பொதுக் கூட்டங்களில் பகிரங்கமாக  பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள்   செயலாளர் எம்.ரி.ஹஸனலி உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-