பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியரொருவர் இன்று சனிக்கிழமை(01) மாணவனொருவனைத் தாக்கிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
க.பொ. த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாண பிரபல பாடசாலையைச் சேர்ந்த மாணவனொருவன் வீட்டுப் பாடம் செய்து வரவில்லை என்ற காரணத்திற்காகக் குறித்த ஆசிரியர் மாணவனைத் தாக்கியதாக மாணவனின் தந்தை யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.