News Update :

Thursday, April 20, 2017

TamilLetter

அட்டாளைச்சேனை இளைஞர் இர்பான் விபத்தில் மரணம்



அட்டாளைச்சேணை ஏ.சி.பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த  இளைஞர் ஏ.இர்பான்  மோட்டார் சைக்கள் விபத்தில் இன்று (21) காலமானார்.

நேற்றிரவு இரண்டு மணியளவில் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பிலிருந்து அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தனது  வீட்டிற்கு திரும்பும் போதே அக்கரைப்பற்று அரசையடியில் வைத்தே    இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சைக்கிளை ஒட்டி வந்த  நபர் படு காயங்களுடன் உயிர் தப்பிய போதும் பின் இருக்கையில் அமர்ந்தவரே இச் சம்பவத்தில் உயிரிழந்தார்.

விபத்துக்குள்ளான நபரின் ஜனாஸா அக்கரைப்பற்று வைத்திய சாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பன்பான எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர் அத்தோடு சிறந்த விளையாட்டு வீரரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய பாவங்களை பொருந்திக்கொண்டு உன் அருளினால் சுவர்க்கத்தை அருள்பாளிப்பாயாக!!!




TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-