எஸ். சப்ரி
நீண்டகாலமாக இழுபறியில் .இருந்து வரும் தேசியப்பட்டியல் விவகாரத்தை முன் நிறுத்தி அட்டாளைச்சேனை மக்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்துவதற்கு எதிர்த்தரப்பினர் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.
அட்டாளைச்சேனை மக்கள் ஒரு போதும் சலுகை்க்காக வாக்களித்த மக்கள் அல்ல சமூக உணர்வோடு சமுதாயத்திற்காக வாக்களித்தவர்கள்.சலுகைக்காக வாக்களிக்கப்பட்டிருந்தால் அதாஉல்லாவையும் உதமாலெப்பையையும் ஆதரித்திருப்பார்கள்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேரிதலின் போது தலைவர் ரவுப் ஹக்கீம் பெருந் திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மூன்று ஆசனங்களை பெருமாயின் அதனுடாக வருகின்ற தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் இதை எந்த கொம்பன் வந்தாலும் தடுக்க முடியாது என கூறினார்.
தலைவர் ரவுப் ஹக்கிமால் மக்கள் மத்தியில் வழங்கப்பட்ட வாக்குறுதி முழுமைாக நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே போராளிகளின் ஆதங்கமாகவுள்ளது.
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுவதன் மூலம் தலைவரின் வார்த்தைக்கு ஒரு பெருமானம் இருக்க வேண்டுமென்பதே அட்டாளைச்சேனை மக்களின் எதிர்பார்ப்பே தவிர பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒரு பெரிய விடயமல்ல என தெரிவித்தார் முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எல்.கலீல்